செவ்வாய், 30 ஜூலை, 2013

வா.மு.கோமு கவிதைகள் இரண்டு



காதல் 2014

உனக்கு அவுக்கணுமாடி? இல்ல நொட்டணுமா?
இந்தப் பயல் உன் மீது மாயையான மோகத்தில்
இருக்கிறான் என்பதற்காக வாறி மடியில்
போட்டுக் கொண்டு..சாரி..துப்பட்டாவில்
முடிந்து கொண்டு எந்த நேரமும் டாக் இசி
உண்ணுவது போல..பன்றி கழுநீர் குடிப்பதுபோல..
ஐஸ்கிரீமிலிருந்து ரோஸ்மில்க் வரை
குடித்து முடித்து தியேட்டரில் பப்ஸையும்
பாப்கார்னையும் வெதுப்புகிறாயே! உன்னிடமிருப்பது
வயிறா? வன்னான் தாழியா? இதுபோக
பெர்த்டே வருதுன்னு காத்தால இருந்து மதியம்
வரைக்கும் உனக்கு புடிச்ச மிடியாம் கூடவே
அதுக்கான உள்ளாடைகளுமாம்! –மதியத்திலிருந்து
மாலைவரை இவன் வாய் சும்மாயிராமல் சொன்ன
சுடிதாராம்..அதும் உன்னிடம் இல்லாத
ரோசா நிறத்திலாம்! எவன் அப்பனூட்டுக் காசை
யாருடி திங்கறது! –தினமும் அவன் அப்பன்
முனிசிபாலிட்டி குப்பை வண்டி ஓட்டி
சம்பாதிக்கிற காசுடி! –ஆமா இவன் ஏன்
மண்டையில புலுத்து திரியறான்?
விமானத்துல போறவ கிட்ட
தண்ணி பாட்டலு கேட்ட மாதிரி!!

பிரிவு

எல்லாவற்றையும் நீ அப்படியே
போட்டுவிட்டு உனக்கான தேவைகளை
மட்டும் தூக்கிக் கொண்டு நீ ஏற்றுக்கொண்ட
புது வாழ்க்கை நோக்கி நடுநிசியில்
வாழப் போவதாய் நம்பி ஓடிப்போனாய்..
எனை அநாதரவாக விட்டு விட்டு!
அந்த இரவு நேரத்தைப் பற்றி நான்
யோசிக்கும் நாளில் நள்ளிரவில்
பெய்ய வேண்டிய மழை சற்றுப் பிந்தி
விடிகாலையில் பெய்யத்துவங்கிற்று!
நீ இல்லாத உன் தலையணையை
எரித்து குளிர்காய ஆயத்தமாகிறேன்!
()()()()()()()()()


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக